Sunday, 5 October 2014

அணு ஆயுத ரகசியங்களை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு திட்டம்!

ஈரானின் அணு ஆயுத ரகசியங்களை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு திட்டமிட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதற்காக அவர்கள் ஈரானுடன் போரிடவும் முடிவு செய்துள்ளனர். ஐ.எஸ். தளபதி ஒருவரது வீட்டில் ஈராக் படையினர் நடத்திய சோதனையின்போது கைப்பற்றிய ஆவணத்தின் மூலம் இந்த தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்காக போராளிகளை அனுப்புவது என பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பு முடிவு செய்துள்ளது.    சிரியா, ஈராக் இரு நாடுகளில் பல்வேறு நகரங்களை பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இது அந்நாட்டு பாதுகாப்புக்கு பெறும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தியுள்ள தலிபான் தீவிரவாத இயக்கம் தனது ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டது.